உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய கல்விக்கொள்கையில் தொலைநோக்கு மறுசீரமைப்பு உத்திகள்

தேசிய கல்விக்கொள்கையில் தொலைநோக்கு மறுசீரமைப்பு உத்திகள்

கோவை:அவினாசிலிங்கம் பல்கலை மற்றும் அனைத்திந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில், புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களின் மாநாடு, அவினாசிலிங்கம் பல்கலை வளாகத்தில் நடந்தது. அனைத்திந்திய பல்கலை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பங்கஜ் மிட்டல் பேசியதாவது: தேசிய கல்விக்கொள்கை தொலைநோக்கு மறுசீரமைப்பு உத்திகளை கொண்டுள்ளது. பல்கலைகள், நிறுவனம், மாணவர், பணியாளர் நிலைகளில் மறுசீரமைப்புக்கு தயாராக வேண்டும். ஆராய்ச்சி, கற்பித்தல், பட்டம் வழங்கும் பல்கலைகளாக, தங்களை அடையாளப்படுத்த வேண்டும். பல்துறை கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தங்களின் கல்வி பயணத்தை வடிவமைக்க, சுதந்திரம் அளிக்க வேண்டும். மாணவர்களுக்கு திறன்களை வழங்க வேண்டும். மதிப்பு அடிப்படையிலான கல்வியை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் பாரதிஹரிசங்கர் வரவேற்றார். பல்கலை வேந்தர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மேற்குவங்க எம்.எல்.ஏ., ஸ்ரீரூபமித்ர சவுத்ரி, பல்கலை பதிவாளர் (பொ) இந்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி