மழலையர் மகிழ்ச்சி, வளர்ச்சிக்கு உதவும் விஸ்மயா பள்ளி
சி ன்னஞ்சிறு மழலைகளின் மகிழ்ச்சி, வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு சிறந்த இடமாக விஸ்மயா பள்ளி உள்ளது. பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: ஒவ்வொரு பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளில் சுத்தமான சூழலும், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற இடமாக விஸ்மயா கிட்ேஸன் குளோபல் பள்ளி விளங்குகிறது. இங்கு 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான டேகேர், ப்ளே குரூப், ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் உள்ளன. வேன் வசதியும் ஏற்படுத்தியுள்ளோம். குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் ப்ரெஞ்சு மொழிகளின் அடிப்படை கல்வி எளிமையான முறையில் கற்றுத்தருகிறோம். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், தரமான பயிற்சியாளர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றனர். செயல்முறை கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குழந்தைகள் மத்தியில் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. படிப்புடன் விளையாட்டு மற்றும் கலைகளும் கற்றுத்தரப்படுகிறது. பாட்டு, நடனம், இசைக்கருவிகள் வாசிப்பு பயிற்சி, யோகா அனைவருக்கும் கற்றுத்தரப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.