உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வளர்ச்சி திட்டங்கள் தொடர தி.மு.க.,வுக்கு வாக்களியுங்கள்

 வளர்ச்சி திட்டங்கள் தொடர தி.மு.க.,வுக்கு வாக்களியுங்கள்

சூலூர்: அனைத்து வளர்ச்சி திட்டங்களும் தொடர தி.மு.க., வுக்கு ஆதரவு அளியுங்கள், என, சூலூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் பிரசாரத்தில் பேசினார். சூலூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் தளபதி முருகேசன், ராசி பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தனது பிரசாரத்தை நேற்று துவக்கினார். மக்களின் மத்தியில் அவர் பேசுகையில், தி.மு.க., ஆட்சியில் மகளிருக்கு என, விடியல் பயணம், மாதந்தோறும், 1000 ரூபாய் ஊக்கத்தொகை, புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி மாணவ, மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், கல்லூரி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அனைத்து மக்களும் பயன் பெறும் திட்டங்கள் அனைத்தும் தொடர, தி.மு.க., வுக்கு ஆதரவு தரவேண்டும். சூலூர் தொகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர எனக்கு ஆதரவு தாருங்கள், என்றார். காங். ,கட்சி நிர்வாகிகள், கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை