உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாக்காளர் திருத்தம்: வேலுமணி ஆய்வு

 வாக்காளர் திருத்தம்: வேலுமணி ஆய்வு

கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆய்வு செய்தார். தமிழகம் முழுக்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இதில், தி.மு.க., பூத் ஏஜென்டுகளின் தலையீடு இருப்பதாக, அ.தி.மு.க., தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சுண்டக்காமுத்தூர், 89வது வார்டில் நடந்த, சிறப்பு தீவிர திருத்த முகாமை வேலுமணி நேற்று ஆய்வு செய்தார். விண்ணப்பங்களைப் பெற்று சமர்ப்பிக்க வந்த வாக்காளர்களிடம், விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதில் உள்ள சிரமங்கள் குறித்து கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை