உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புத்தகப்பை முதல் காலணி வரை மாணவர்களுக்காக காத்திருப்பு

புத்தகப்பை முதல் காலணி வரை மாணவர்களுக்காக காத்திருப்பு

கோவை : தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து விதமான பள்ளிகளும் நாளை (ஜூன் 2) திறக்கப்படும் நிலையில், கோவை கல்வி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், மாணவர்களுக்கு வழங்க இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்க தயாராக உள்ளன.6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் நலத்திட்டப் பொருட்கள், மே 6ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கான 480 புத்தகங்களும் கடந்த வாரம் முதல் வினியோகிக்கப்படுகின்றன.2025 - 2026 கல்வியாண்டில், 80 ஆயிரம் புத்தகப்பை, 22 ஆயிரம் கணித உபகரணப் பெட்டிகள், 56 ஆயிரம் காலணிகள், 1 லட்சத்து 12 ஆயிரம் காலுறைகள், 68 ஆயிரம் சீருடைகள், மேலும் புவியியல் வரைபடங்கள், கிரேயான்கள், வண்ண பென்சில்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப, வட்டார மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அரசு ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், 'பள்ளிகள் திறக்கும்போது மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் இதர கல்வி உபகரணங்களை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சீருடைகள் மாணவர்களின் உடல் அளவுக்கு ஏற்ப சரிபார்த்து வழங்கப்படும். மேலும், ஜூன் மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், பாடப்புத்தகங்கள் போதுமான அளவில் இருப்பில் உள்ளன' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை