வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கையெழுத்து போட்டால் சம்பளம் நிச்சயம் தகுதி எல்லாம் யாருக்கு வேண்டும்
காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்த தத்திகள் தான் இப்போது அதிகம்
கோவை : கோவை மாநகராட்சியில், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் போதிய தொழில்நுட்ப அறிவு இல்லாத பணியாளர்களுக்கு, இளம் பொறியாளர் (இன்சார்ஜ்) பொறுப்பு வழங்கி, வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், ரோடு தரமில்லாமல் போடப்படுகின்றன. சில மாதங்களிலேயே குண்டும் குழியுமாகி விடுவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைகின்றனர்.கோவை மாநகராட்சியில் பொறியியல் பிரிவு மிகவும் முக்கியமானது. ரோடு போடுவது; மழை நீர் வடிகால் கட்டுவது; கழிப்பறை கட்டுவது; பூங்கா அமைப்பது உள்ளிட்ட அனைத்து வகையான கட்டுமான பணிகள் செய்வது, பொறியியல் பிரிவினர் வேலை. இதில், 'சிவில் ஒர்க்' மற்றும் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பல வேலைகள் இருக்கின்றன. பதவி உயர்வு
மாநகராட்சியில், 100 வார்டுகள் இருந்தாலும், உதவி/ இளம் பொறியாளர்களாக, 43 பேரே பணிபுரிகின்றனர். இதில், 21 பேர் மட்டுமே பி.இ., படித்தவர்கள். டிப்ளமோ படித்த ஒன்பது பேர், இளம் பொறியாளர்கள். மீதமுள்ளவர்களில், 9 பேர் தொழில்நுட்ப உதவியாளர்கள், 4 பேர் தேர்ச்சி திறன் பணியாளர் நிலை-2 என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள்.தேர்ச்சி திறன் பணியாளர் நிலை - 2 என்ற பொறுப்பில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்தால், தேர்ச்சி திறன் பணியாளர் நிலை-1 என்ற பதவி உயர்வு வழங்கப்படும்; இப்பணியில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்தால் தொழில்நுட்ப உதவியாளர் என்கிற உயர்வு கிடைக்கும். இதில், ஐந்தாண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே இளம் பொறியாளர் பதவி வழங்க வேண்டும் என்பது விதிமுறை. வார்டு பொறுப்பு
மாநகராட்சியில் காலி பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக, தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் தேர்ச்சி திறன் பணியாளர் - நிலை-2 ஆகிய தகுதியுடையவர்களுக்கு இளம் பொறியாளர் (இன்சார்ஜ்) பணியிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்விரு பிரிவை சேர்ந்தவர்கள், உதவி/ இளம் பொறியாளர்களுக்கு உதவியாளர்களாக பணிபுரிய வேண்டும். 15 ஆண்டு சீனியாரிட்டி இல்லாத அலுவலர்களை, இளம் பொறியாளர்களாக (இன்சார்ஜ்) மாநகராட்சி நிர்வாகம் நியமித்து, வார்டு பொறுப்புகளை ஒதுக்கியிருக்கிறது.இத்தகைய அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப அறிவு போதுமானதாக இல்லாததால், சமீபகாலமாக போடும் ரோடுகள் தரமற்றவையாக இருக்கின்றன. ஒரு மழைக்கு கூட தாங்குவதில்லை. மழைக்கு முன் போடப்பட்ட பல ரோடுகளில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு, தற்போது 'பேட்ச் ஒர்க்' செய்யும் பணி நடந்து வருகிறது. இதுபோன்ற பிரச்னை தொடராமல் இருக்க, வார்டு பணிக்கு தகுதியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.நேர்காணல்மாநிலம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இவற்றை பூர்த்தி செய்ய, சமீபத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது. விரைவில் பூர்த்தி செய்யப்படும்.- மாநகராட்சி அதிகாரிகள்.
கையெழுத்து போட்டால் சம்பளம் நிச்சயம் தகுதி எல்லாம் யாருக்கு வேண்டும்
காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்த தத்திகள் தான் இப்போது அதிகம்