நான்கு அடி ஆழத்தில் தண்ணீர்
கோவில்பாளையம்; அத்திக்கடவு திட்டத்தில், காளிங்கராயன் குளம், அக்ரஹார சாம குளம் உள்ளிட்ட பல குளங்களில் 50 சதவீதம் நீர் தேங்கியுள்ளது. இதையடுத்து சுற்றுவட்டாரத்தில் கிணற்றில் நீர் ஊற துவங்கிவிட்டது. இப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கிணற்றில் வெறும் நான்கு அடி ஆ ழத்திலேயே தண்ணீர் நிற்கிறது. குனிந்து பக்கெட்டில் தண்ணீரை எடுக்கும் அளவுக்கு தண்ணீர் மேலே வந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடை ந்துள்ளனர்.இதுகுறித்து தன்னார்வலர் துரைசாமி கூறுகையில், அக்ரஹார சாம குளத்திற்கு மழை நீர் வரும் பாதை 100 சதவீதம் தூர்வாரப்பட்டு குளத்தில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டால் மற்ற கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும், என்றார்.