மேலும் செய்திகள்
குழாயில் உடைப்புவீணாகும் தண்ணீர்
07-Mar-2025
கோவை; கோவை, சுந்தராபுரம் அருகே, மதுக்கரை மார்க்கெட் ரோட்டில், குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. அதை செப்பனிடுவதற்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை இன்னும் அனுமதி வழங்காததால், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது; தண்ணீர் வீணாக ரோட்டில் செல்கிறது.கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு, உட்பட்ட சுந்தராபுரத்தில் இருந்து மதுக்கரை மார்க்கெட் செல்லும் ரோட்டில், நான்கு இடங்களில் குழாய் உடைந்து, குடிநீர் கசிவு ஏற்பட்டிருக்கிறது.இதுதவிர, 85வது வார்டு மற்றும், 94 முதல், 100வது வார்டு வரையுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பிரதான ரோடுகளில், அழுத்தம் காரணமாக, குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கசிந்து வருகிறது; ரோடும் சேதமடைந்து வருகிறது.குடிநீர் கசிவுகளை இரவு நேரங்களில் சரி செய்வதற்கு, பணியை முடித்ததும் சாலையை வெட்டியுள்ள பகுதியில், ரோட்டை சீரமைக்க வேண்டும்.நெடுஞ்சாலைத்துறை அறிவுரைப்படி, ரோட்டை சீரமைத்து தருவதாக உறுதியளித்து, ஜன., 6ம் தேதி, மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர், மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளருக்கு, கடிதம் எழுதியுள்ளார். மூன்று மாதங்களாக, குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை இன்னும் அனுமதி தரவில்லை.புதிதாக போடப்பட்ட ரோடு என்பதால், அனுமதியின்றி தோண்டுவதற்கு பயந்து, மாநகராட்சி அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அரசு துறை அதிகாரிகளின் இத்தகைய செயல்பாடுகளால், ரோட்டில் மூன்று மாதமாக, குடிநீர் வீணாகிச் செல்கிறது. இதை பொதுமக்கள் விமர்சித்துச் செல்கின்றனர்.
07-Mar-2025