உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் குழாய் உடைப்பு விறுவிறுப்பாக சீரமைப்பு

குடிநீர் குழாய் உடைப்பு விறுவிறுப்பாக சீரமைப்பு

மேட்டுப்பாளையம்: திருப்பூர் மாநகராட்சியின், உடைந்த குடிநீர் குழாயை, சீரமைக்கும் பணிகள் துவங்கின.மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து, திருப்பூர் மாநகராட்சிக்கு, ராட்சத இரும்பு குழாய் வழியாக குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது.ஒரு நாளைக்கு, 19 கோடியே, 60 லட்சம் லிட்டர் தண்ணீர், பவானி ஆற்றில் இருந்து எடுத்து, பம்பிங் செய்யப்படுகிறது.இந்நிலையில், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில், நடூர் பாலம் அருகே, இரும்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர், 25 அடிக்கு மேல் பீறிட்டு அடித்தது. இதனால் அப்பகுதியில் சாலையின் இரண்டு பக்கமும் மண்ணரிப்பு ஏற்பட்டு, சாலை சேதம் அடைந்தது.நேற்று முன்தினம் இரவில் இருந்து, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிகளில், அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி