மேலும் செய்திகள்
இளநீர் விலையில் மாற்றமில்லை
23-Dec-2024
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளதுஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 22 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 8,500 ரூபாய். இளநீர் அறுவடை மிகவும் நல்ல முறையில் நடந்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யாத காரணத்தாலும், பனியின் தாக்கம் குறைவாகவே உள்ளதால் இளநீரின் தேவை அதிகமாக உள்ளது.சென்னை, நேபாளம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இளநீர் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக, அனைத்து வட மாநில பகுதிகளிலும் இளநீருக்கு தேவை உள்ளது.தற்போது, தேங்காயின் விலை ஒரு டன், 61 ஆயிரம் என்ற அளவில் விற்பனையாகும் நிலையில் இளநீரின் விலையை உயர்த்த வேண்டியுள்ளது.வியாபாரிகள் சிலர், பல காரணங்களைக்கூறி விவசாயிகளிடம் இருந்து மிகவும் குறைந்த விலையில் இளநீர் வாங்கிச் செல்கின்றனர்.விவசாயிகளும் எவரையும் கலந்து ஆலோசிக்காமல் மிகவும் குறைந்த விலைக்கு இளநீரை விற்கின்றனர். இளநீர் சந்தை நல்ல முறையில் இருப்பதால் வரும் காலங்களில், கணிசமாக விலை உயரும் வாய்ப்புள்ளது.விவசாயிகள், எவ்வித அச்சமும் இன்றி இளநீர் அறுவடையை சில நாட்கள் தள்ளி வைத்து, நல்ல விலை கிடைக்கும் போது, விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
23-Dec-2024