மேலும் செய்திகள்
இளநீர் விலையில் மாற்றமில்லை
23-Dec-2024
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 26 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 9,500 ரூபாய். பொங்கல் பண்டிகை ஒட்டி இளநீரின் தேவை அதிகரித்த போதும், வெளியூர் செல்ல போதிய லாரிகள் கிடைக்காத காரணத்தால், இளநீர் அறுவடை சற்று மந்தமாக நடக்கிறது.பொங்கல் முடிந்த பின்பு, இளநீர் அறுவடை சுறுசுறுப்படையும். வரத்து சரிந்து வருவதால், இளநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் வியாபாரிகளிடம் நல்ல விலையைக் கேட்டுப் பெற்று, இளைநீரை விற்கவும். இவ்வாறு, அவர் கூறினார்.
23-Dec-2024