மேலும் செய்திகள்
தண்ணீர் தொட்டி அகற்றம்; பொதுமக்கள் அதிருப்தி
25-Oct-2025
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வடசித்தூரில் தண்ணீர் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். கிணத்துக்கடவு, வடசித்தூர் கிராமத்தில், 7 மற்றும் 8வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, அங்குள்ள போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுத்து, மேல்நிலை தொட்டி வாயிலாக, வாரம் ஒருமுறை வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், போர்வெல்லில் தண்ணீர் குறைந்ததால், கடந்த, 20 நாட்களாக சீராக தண்ணீர் வழங்கப்படுவதில்லை.தண்ணீர் வினியோகம் செய்யாதது குறித்து, பொதுமக்கள் ஊராட்சி குடிநீர் பணியாளரிடம் கேட்டு உள்ளனர். அவர் முறையாக பதில் அளிக்காததால் ஆவேசமடைந்த மக்கள் வடசித்தூர் நான்கு ரோடு பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, அப்பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'தண்ணீர் பிரச்னையை தற்காலிகமாக சரி செய்துள்ளோம். வடசித்தூர் பகுதியில் புதிதாக போர்வெல் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அனுமதி பெறப்பட்டு, அங்கு போர்வெல் அமைத்து தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்,' என்றனர்.
25-Oct-2025