உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டீசலை மிச்சப்படுத்தியே ஆகணும்! திணறும் அரசு பஸ் டிரைவர்கள்

டீசலை மிச்சப்படுத்தியே ஆகணும்! திணறும் அரசு பஸ் டிரைவர்கள்

பொள்ளாச்சி; முறையாக பழுது நீக்காமை, இழுவைத் திறன் குறைவு போன்ற காரணங்கள் இருந்தும், ஒரு லிட்டர் டீசலுக்கு, 5.5 கி.மீ., துாரம் செல்லும் வகையில் பஸ்சை இயக்க வேண்டும், என, அதிகாரிகள் கோருவதால், அரசு பஸ் டிரைவர்கள் திணறுகின்றனர்.அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சியில் உள்ள மூன்று பணிமனைகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழித்தடத்தில், தினமும் பஸ் சென்று திரும்பும் துாரத்திற்கு ஏற்ப, 80 முதல் 110 லிட்டர் டீசல் நிரப்பப்படுகிறது.ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவு டீசல் பிடிக்கப்பட்டாலும், லிட்டருக்கு, 5.5 கி.மீ., துாரம் செல்லும் வகையில், பஸ்சை இயக்க டிரைவர்கள் நிர்பந்தம் செய்யப்படுகின்றனர்.ஆனால், முறையாக பழுது நீக்காமல் இருப்பது, இழுவை திறன் குறைவு, அதிப்படியான ஸ்டாப் மற்றும் நெரிசல் மிக்க ரோடுகளில் நின்று செல்வது போன்ற காரணங்களால், டீசலை மிச்சப்படுத்த முடியாமல், அரசு பஸ் டிரைவர்கள் திணறுகின்றனர். இதேபோல, தனியார் பஸ்களுடன் போட்டியிட்டு, வருவாயைப் பெருக்கவும் கண்டக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.டிரைவர்கள், கண்டக்டர்கள் கூறியதாவது:அரசு பஸ்சை இயக்கியவுடன், 20 நொடிகளில், 'டாப்' கியரில் செல்ல வேண்டும் என, தெரிவிக்கப்படுகிறது. இழுவை திறன் குறைவால், பஸ்சை சீராக இயக்குவது சிரமம். டீசல் சேமிப்பு என்ற பெயரில், குறிப்பிட்ட இடங்களில், வேகத்தை சீராக உயர்த்தி, அதன்பின் எக்ஸ்லேட்டரில் இருந்து காலை எடுத்தாலும், குறைந்த கி.மீ., துாரம் வரை மட்டுமே செல்கிறது.பொள்ளாச்சி நகரில் இருந்து, 10 கி.மீ., துாரத்திற்கு மக்கள் சென்றடையும் வகையில், டவுன் பஸ்கள் இயக்கப்பட்டாலும், புறநகர் பஸ்களும் அந்தந்த ஸ்டாப்புகளில் நின்று செல்வதாலும், டீசல் பயன்பாடு அதிகரிக்கிறது.இதேபோல, தனியார் பஸ்கள் முறையான வழித்தடத்தில் இயக்கப்படுவதும் கிடையாது. அதனால், பயணியர், தனியார் பஸ்சில் பயணிக்க ஆர்வம் காட்டுவதால், அரசு பஸ்களில் கூட்டம் இல்லாமல் வருவாய் குறைகிறது. பிரச்னைகளை முறையாக கண்டறிந்து தடுத்தால் மட்டுமே உரிய தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை