உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும்

பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும்

கோவை; தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம்(கோவை மாவட்டம்) சார்பில், பணி நிறைவு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, பாராட்டு விழா நடந்தது.திவ்யோதயா அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், கோவை அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் ஜெயக்குமார், பணி ஓய்வு பெற்ற, 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.நிறைவில், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகள், தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.ஆசிரியர் சங்கமாவட்ட தலைவர் கணேச மூர்த்தி, பொள்ளாச்சி நுகர்வோர் சங்க தலைவர் இந்திராணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி