உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீவிரம் குறைந்த பருவமழை: விவசாய பணிகள் தீவிரம்

தீவிரம் குறைந்த பருவமழை: விவசாய பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் குறைந்த நிலையில், விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழைக்கு, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை ஏழு முறை நிரம்பியது. இந்நிலையில் கடந்த மாதம், 16ம் தேதி வடகிழக்குப் பருவமழை துவங்கிய நிலையில், சில தினங்களுக்கு முன் சோலையாறு அணை எட்டாவது முறையாக நிரம்பியது. இதேபோன்று, ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளது. இதனால், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஐப்பசி மற்றும் கார்த்திகை பட்டத்தில் மானாவாரி நிலத்தில் கால்நடை தீவன பயிர்கள் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி