உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுரை வீரன் திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம்

மதுரை வீரன் திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம்

வால்பாறை; வால்பாறை கக்கன்காலனி மதுரை வீரன் கோவிலில், 75ம் ஆண்டு திருவிழா கடந்த, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று முன்தினம் (8ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு பல்வேறு கோவில்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித தீர்த்தம் மற்றும் சக்தி அழைத்து வரபட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.நேற்று (9ம் தேதி) காலை, 11:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, திருமண சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. அதன்பின், மதியம், 12:30 மணிக்கு மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.இன்று, 10ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !