மேலும் செய்திகள்
வேளாண் பல்கலையில் தேனீ வளர்க்க பயிற்சி
05-Mar-2026
கற்றுக்கொள்ளலாம் வாங்க பெர்க்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கோடைகால பயிற்சி முகாம் நடக்கிறது. ஸ்கேட்டிங், பேஸ்கெட் பால், டென்னிஸ் நடத்தப்படுகிறது. காலை, மாலை என இரண்டு நேரங்களிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. இது கட்டண பயிற்சி. முன்பதிவுக்கு 81481 90834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இடம்: உப்பிலிபாளையம். பட்டமளிப்பு விழா பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இரண்டு அமர்வுகளாக நடைபெறும் இந்த விழாவில் 4 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர். நேரம்: காலை 10 மணி முதல்; தேதி: ஏப்.,4 நிலா சோறு வில் ப்ரெஷ் வழங்கும் நிலா சோறு அனுபவத்தில் பண்ணை நடை, பறவைகள் சரணாலயம், விளையாட்டு ஆகியவற்றுடன் இணைந்த அனுபவத்தை பெறலாம். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். நேரம்: 3.30 மணி முதல், தேதி: ஏப்.,4 இடம்: சித்திரை சாவடி. தேனீ வளர்ப்பு பயிற்சி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தேனீ வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. இனம் கண்டறிதல், வளர்ப்பு முறை, மகரந்தச் சேர்க்கை, தேனை பிரித்து எடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் ரூ. 590. காளான் வளர்ப்பு பயிற்சி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு கட்டணம் ரூ. 590. இடம்: வேளாண் பல்கலைக்கழகம் நேரம்: காலை 9 மணி முதல். தேதி: ஏப்.,6
05-Mar-2026