முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
கோவை; நைட்டிங்கேல் இன்ஸ்டியூட் பிசியோதெரபி மற்றும் எண்ணம் மருந்தியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. முதலாமாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.குடியரசு தலைவரின் உயரிய விருதான திவ்யஞ்சன் விருதை பெற்ற ஸ்வர்லதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார்.அவர், 'முயற்சி மற்றும் திட்டமிடல் மட்டுமே ஒரு மனிதனை சாதனையாளனாக்கும். உங்கள் இலக்கில் திட்டமிட்டு தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி கிட்டும்'' என்றார்.நிகழ்வில், நைட்டிங்கேல் கல்லுாரி தலைவர் மனோகரன், செயலாளர்கள் ராஜீவ் மற்றும் சஞ்சய், பிசியோதெரபி கல்லுாரி முதல்வர் ராஜன், பார்மசி கல்லுாரி தலைவர் இந்துலதா துணை முதல்வர் முகில் சிங், துர்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.