முதல்வரின் தாயுமானவர் திட்டத்துக்கு வரவேற்பு
பொள்ளாச்சி; தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டத்துக்கு, கோவை மாவட்ட நாடக கலை கழக முதியோர் பேரவை வரவேற்பு தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட நாடக கலை கழக, நெகமம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வட்டார முதியோர் பேரவையின் நிறுவனர் சண்முகவடிவேல் அறிக்கை: மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் இல்லத்துக்கே, ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லும் வகையில், முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது முதியோர், மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் திட்டமாக உள்ளது. இதற்கு முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். வரும், செப். 7ம் தேதி நெகமத்தில் பேரவை சார்பில் முதல்வருக்கு பாராட்டு, நன்றி தெரிவிக்கும் வகையில் விழா நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.