உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எம்.எல்.ஏ.,க்கு வரவேற்பு 

எம்.எல்.ஏ.,க்கு வரவேற்பு 

பொள்ளாச்சி: வால்பாறையில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் சுதாகர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றுக்கொண்டார். ஆனைமலை வந்த அவருக்கு, தி.மு.க., மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். அதன்பின், வால்பாறை தொகுதியில் ஓட்டு அளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். வெற்றிக்காக பாடுபட்ட முகவர்கள், கிளை, வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு, எம்.எல்.ஏ., நன்றி தெரிவித்தார். முன்னதாக கருமத்தம்பட்டியில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி