மேலும் செய்திகள்
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
19-Sep-2024
கோவை : மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் மனுக்களை பெற்றார். கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது, விசாரணை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து, மறுவிசாரணை நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு புதன்கிழமையும், எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.இந்நிலையில், நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் மேற்பார்வையில், எஸ்.பி., கார்த்திகேயன், தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், குடும்பப்பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்னை தொடர்பான, 79 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை நடந்தது. அதில் இரண்டு மனுக்கள் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. ஒரு மனு மீது, சி.எஸ்.ஆர்., பதிவு செய்யப்பட்டது. 65 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 11 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரையும் செய்யப்பட்டது. குறை தீர் கூட்டத்தில் , டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
19-Sep-2024