உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இருக்கும் எம்.பி.,க்கள் என்ன செய்து விட்டார்கள்? காட்டமாக கேட்கிறார்கள் கோவை மக்கள்

இருக்கும் எம்.பி.,க்கள் என்ன செய்து விட்டார்கள்? காட்டமாக கேட்கிறார்கள் கோவை மக்கள்

தொ குதி மறுசீரமைப்பால் எம்.பி., தொகுதிகளில் மாற்றம் இப்போதைக்கு இல்லை என, மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்ட நிலையில், அது குறித்து தென்மாநில முதல்வர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்ற கூட்டம், தமிழக முதல்வர் தலைமையில் நேற்று நடந்தது. இது குறித்து, கோவை மக்கள் சிலரிடம் பேசினோம்.லோக்சபா தொகுதிகளை பா.ஜ., அரசு மறுசீரமைப்பு செய்யப்போவது, தமிழக அரசுக்கு தெரிந்து விட்டது. இதனால் தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் வந்து விட்டது. அதை தடுக்கத்தான் இந்த கூட்டம் நடக்கிறது.- சரவணன் ஆட்டோ ஓட்டுனர்.மறுசீரமைப்பு செய்தாலும், தொகுதி எண்ணிக்கையை மத்திய அரசு குறைக்க வாய்ப்பில்லை. குறைத்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு வரும்.- கவின்ராஜ் கல்லுாரி மாணவர்இந்த கூட்டம் இப்போது தேவையில்லை. எம்.பி., எண்ணிக்கை குறைய வாய்ப்பு இல்லை. எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் நல்லது.- கவுசல்யா தனியார் நிறுவன ஊழியர்எனக்கு அரசியல் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் மக்கள் தொகை அடிப்படையில், எம்.பி., தொகுதி எண்ணிக்கையை குறைக்கக் கூடாது. மக்கள் அதிகம் உள்ள மாநிலங்களில், எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.- ஜீவிதா தனியார் நிறுவன ஊழியர்இத்தனை எம்.பி.,க்கள் இருந்து என்ன பிரயோஜனம். மக்களுக்கு ஒன்றும் செய்வதில்லை. அதிகமாகி என்ன ஆகப்போகிறது. இருக்கும் தொகுதி அப்படியே இருந்தால் போதும்.-ராதா இல்லத்தரசிசட்டசபை தேர்தல் வர இருப்பதால், எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை பேசுகின்றனர். மறுசீரமைப்பு அறிவிப்பு வரும் முன் இந்த கூட்டம் தேவையில்லை. வந்தாலும் தொகுதி எண்ணிக்கை குறையாது.- சண்முகம் துணி வியாபாரிதொகுதி மறுசீராய்வு பற்றி, மத்திய அரசு எதுவும் சொல்லாத போது, இந்த கூட்டம் இப்போது தேவை இல்லை. நேர விரயம்தான். தொகுதி எண்ணிக்கையை மத்திய அரசு குறைக்காது.-சந்துரு கல்லுாரி மாணவர்தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு எந்த அறிவிப்பு செய்யவில்லை. ஆனால் சட்டசபை தேர்தலுக்கு பிறகு வர வாய்ப்புள்ளது. இப்போது கூட்டம் நடத்துவதால் எந்த பயனுமில்லை.- விஷ்வலிங்கம் சுயதொழில்தமிழகத்தில் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை. தொகுதி வரையறை செய்தால் மக்கள் தொகை அடிப்படையில், எம்.பி., தொகுதி எண்ணிக்கை நிச்சயம் குறையும்.- ஹரி கல்லுாரி மாணவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Nandakumar Naidu.
மார் 24, 2025 03:14

போண்டா,பஜ்ஜி,சமோசா சாப்பிட்டுவிட்டு பாராளுமன்றத்தில் மீன் மார்கெட்டில் உள்ளது போல கூச்லிடுகிரார்கள். அவ்வளவுதான்.


Jay
மார் 23, 2025 12:32

கோயம்புத்தூர் தொகுதி மக்களுக்கு அரிய வாய்ப்பு கிடைத்தது அண்ணாமலை மூலமாக. 4 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் ஓட்டுப் போட்டு இருந்தாலும் அண்ணாமலை MPயாக தேர்வு ஆகி இருந்தால் நிச்சயம் மத்திய அமைச்சராக ஆகி இருப்பார். விஐபி தொகுதியாக கோயம்புத்தூர் மாறி இருக்கும். எங்கு எப்படி காய் நகர்த்தி கோயம்புத்தூருக்கு பலன்கள் கொண்டு வர வேண்டும் என்பது அண்ணாமலைக்கு தெரியும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம்பி இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதையும் அதே இடத்தில் அண்ணாமலை இருப்பதையும் நினைத்து பார்த்தால் வித்தியாசம் தெரியும். இந்திய மனநிலைமைக்கு எதிராக ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் ஓட்டு போட்டு தமிழ்நாட்டிற்கு பலன்கள் கிடைக்காமல் போகிறது. தொழில் வளம் நிறைந்த நமது மாநிலம் வருங்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போவதற்கு, இன்று மக்கள் சிந்திக்காமல் ஓட்டு போடுவது முக்கியமான காரணமாக இருக்கும்.


अप्पावी
மார் 23, 2025 08:20

பைத்தியக்காரத்தனமான கேள்வி. தமிழகத்து எம்.பி க்களின் தயவு மத்திய அரசுக்கு தேவையில்லை. இன்னிக்கி பிஹார், ஆந்திரா வுக்கு கோடி கோடியா ஏன் உதவி கிடைக்குது? அவிங்க எம்.பி க்களின் முட்டு தேவையா இருக்கறதாலதான். கோவை மக்களே கொஞ்சம் மூளையை உபயோகிச்சு பழகுங்க.


சமீபத்திய செய்தி