உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலவச சட்ட உதவி பெற தகுதி என்ன? விழிப்புணர்வு முகாமில் விளக்கம்

இலவச சட்ட உதவி பெற தகுதி என்ன? விழிப்புணர்வு முகாமில் விளக்கம்

பெ.நா.பாளையம்: இலவச சட்ட உதவி பெற தகுதியுடைய நபர்கள் குறித்து, அடிப்படை சட்ட விழிப்புணர்வு முகாமில், விளக்கம் அளிக்கப்பட்டது.பெரியநாயக்கன்பாளையத்தில், தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து, அடிப்படை சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தின.முகாமில், வழக்கறிஞர் தளபதி ஸ்ரீராம், இலவச சட்ட உதவி, சட்டப்பணி ஆணை குழு, தகவல் பெறும் உரிமை சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், ஊழல் ஒழிப்பு சட்டம், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், டெலிலா ஆகியவை குறித்து விளக்கினார்.பட்டியல் பிரிவினர், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் பிரிவினர், பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், சாதி வன்கொடுமை, வெள்ளம், பஞ்சம், நிலநடுக்கம், தொழில் அழிவு ஆகிய எதிர்பாராத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்ல சிறார்கள், மனநல மருத்துவமனையில் உள்ள மனநல இல்லங்களில் சட்டப்படி காவலில் வைக்கப்பட்டவர்கள், ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள், இலவச சட்ட உதவி பெற தகுதி உடையவர் என, விளக்கிக் கூறினார்.நிகழ்ச்சியில், தேசிய மனித மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் சரசு வரவேற்றார். கோவை கேலக்ஸி ரோட்டரி சங்க தலைவர் பழனியப்பன், முகாமை துவக்கி வைத்தார். முகாமில், பங்கேற்றவர்களுக்கு சட்டம் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மைய இயக்குனர் சகாதேவன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ