உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டாசு தீக்காயம் ஏற்பட்டால் முதலில் செய்ய வேண்டியதென்ன?

பட்டாசு தீக்காயம் ஏற்பட்டால் முதலில் செய்ய வேண்டியதென்ன?

கோவை; தீபாவளி சமயத்தில் வெடிக்கும் பட்டாசுகளால், சில நேரங்களில் எதிர்பாராத விதமாக விபத்துகள் நடக்கலாம். அப்போது செய்ய வேண்டியதென்ன?

சிறு காயங்கள்

முதலில் காயம்பட்ட நபரை, அங்கிருந்து தூக்கி காற்றோட்டமுள்ள பகுதிக்கு கொண்டு வாருங்கள். காயம் பட்ட இடத்திலிருந்து துணியை அகற்றுங்கள். நெருப்பு சுட்ட இடத்தில், குளிர்ந்த நீரை ஊற்றுங்கள். ஐஸ் கட்டி, மிகவும் குளிர்ச்சியான நீர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம். குளிர்ந்த நீரில் பருத்தி துணியை நனைத்து, 3 - 5 நிமிடங்களுக்கு வையுங்கள். காயம் பட்ட இடத்தில் பவுடர், வெண்ணெய், கிரீஸ் என உடனே எதையும் தடவாதீர்கள்.

பெரிய காயங்கள்

அடிபட்ட நபரின் உடலில், துணிகளை கழற்றிவிட்டு பருத்தி துணியால் மூடி விடுங்கள். உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள். அதுவரை காயத்திற்கு எந்த மருந்தும் கொடுக்காதீர்கள். அது பாதிப்பை மேலும் மோசமாக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ