உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல் வாக்குறுதி என்னாச்சு முதல்வரே! முதல்வருக்கு ஓய்வூதியர்கள் கேள்வி

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு முதல்வரே! முதல்வருக்கு ஓய்வூதியர்கள் கேள்வி

கோவை : அனைத்து ஓய்வூதியர் அமைப்பினரும் ஒன்றிணைந்து, தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில், புதிய அமைப்பை துவங்கி உள்ளனர். இந்த அமைப்பு வாயிலாக, ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி, கோவை கலெக்டர் அலுவலகம் வாயிலாக, தமிழக முதல்வருக்கு மனு அளிப்பது என, சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் பலராமன் தலைமையில், 70 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளாவை சந்தித்து, மனு அளித்துள்ளனர். கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் கடந்த சட்டசபை தேர்தலின்போதுபோது, அளித்த வாக்குறுதிபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். வாக்குறுதியில் கூறியபடி, 70 வயது நிறைவடையும் பொழுது, 10 சதவிகிதமும், 80 வயது நிறைவடையும் பொழுது மேலும் 10 சதவிகிதமும் கூடுதலாக, ஓய்வூதியம் வழங்க வேண்டும்.சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும், குறைந்தபட்ச சட்டபூர்வ ஓய்வூதியமும், பணிக் கொடையும் வழங்கிட வேண்டும் வருவாய் கிராம ஊழியர்கள், ஓய்வு பெற்ற சிவில் சப்ளை பணியாளர்கள் ஆகியோரின், ஓய்வூதியம் சார்ந்த நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து கழக ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு, பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள, அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய நிலுவைகளை உடனே வழங்க வேண்டும்.போக்குவரத்து கழகங்கள், பல தரப்பட்ட மக்களுக்கு லாப நோக்கின்றி சேவைகளை செய்து வருவதால், ஓய்வூதியம் வழங்கும் 'டிரஸ்ட்' ஏற்பாட்டை கைவிட்டு, கழகங்களின் வரவு- செலவு வித்தியாசங்களை அரசே ஈடுகட்ட, பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sitaraman Munisamy
ஜூன் 01, 2025 14:57

இவர்கள் பணி ஒய்வு பெற்ற போது கிடைத்த சம்பளத்தில் 50% பென்ஷன்வாங்குறான் . 6 மாதத்திற்கு ஒருமுறை DA உண்டு. மேலும் மருத்துவ காப்பீடு உண்டு. ஆனால் EPF சந்தாதாரர்கள் 3000 ரூ க்கு மேல் பென்ஷன் இல்லை. உச்சநீதிமன்றம் உயர் பென்ஷன் உத்தரவு 4.11.22. இல் வந்தும் நிறைவேற்றப் படவில்லை


gopalasamy N
ஜூன் 01, 2025 07:02

திமுக விக்கு ஒட்டு போட்டு மீண்டும் ஆட்சியில் அமர்த்தி கோரிக்கை வெய்து 2030 பெற முயற்சிக்கலாம்


புதிய வீடியோ