உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீங்கள் எப்படிப்பட்டவர்...? சொல்கிறது ஹேர்ஸ்டைல்

நீங்கள் எப்படிப்பட்டவர்...? சொல்கிறது ஹேர்ஸ்டைல்

“உங்கள் ஹேர் ஸ்டைல் உங்கள் ஆளுமை, சிந்தனை, வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?ஆம். ஒரு ஹேர் ஸ்டைல் வெறும் அழகுக்காக மட்டுமல்ல; அது உங்கள் மனநிலையையும், தனித்துவத்தையும் பிரதிபலிக்கிறது என்கிறார், ேஹர் ஸ்டைலிஸ்ட் திலீப்குமார்.''இன்றைய டிரெண்டில், பெண்களுக்கான பிளன்ட் பாப், பட்டர்ப்ளை ஹேர் கட் போன்ற ஸ்டைல்கள், டாப் லிஸ்டில் உள்ளன.லாங் லேயர்ஸ் பேஸ் ப்ரேமிங் ஸ்டைல், முகத்தில் மென்மையையும் அழகையும் கூட்டும் வகையில் இருப்பதால், இது பலருடைய முக்கிய தேர்வாக இருக்கிறது,''

''பெண்களுக்கு ஓகே...ஆண்களுக்கு?''

''ஆண்களுக்கும் ஹேர் ஸ்டைலில், பங்கு உள்ளது. இப்போதெல்லாம் மாடர்ன் முல்லெட் ஹேர் கட் டிரெண்டாக இருக்கிறது. எப்போதும் சரியான, சீரான தோற்றத்துடன், ஜென்டில்மேன் லுக் விரும்புவோர், பஸ்ஸ் கட் மற்றும் தாடியுடன் கூடிய 'பேட் ஸ்டைல் ஹேர் கட் போன்றவற்றை தேர்வு செய்கிறார்கள்,''.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ