உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மராத்தான்

மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மராத்தான்

பெ.நா.பாளையம்; கவுண்டம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மராத்தான் போட்டி நடந்தது.சிற்றுளி அறக்கட்டளை, கங்கா மருத்துவமனை, வேவிக்கல் டேட்டா சொல்யூஷன்ஸ், சென்னை சில்க்ஸ், இன்பினிட்டி சாப்ட்வேர், ஐ.பி.ஐ.எஸ்.,இணைந்து வீல்ஸ் மராத்தான் போட்டியை கவுண்டம்பாளையத்தில் நடத்தியது.நிகழ்ச்சிக்கு, கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட துறையின் தலைவர் டாக்டர் ராஜசேகரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கலெக்டர் கிராந்தி குமார் பாடி, ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, கவுரவ விருந்தினர்களாக வேவிக்கில் டேட்டா சொல்யூஷன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாதேஷ் ஜெயபால், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை செயல் இயக்குனர் விக்ரம் நாராயணன், ஐ.பி.ஐ.எஸ்.,கோயம்புத்தூர் பொது மேலாளர் அஜித் ஜோஸ், இன்பினிட்டி சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் தயாரிப்பு மேம்பாட்டு மேலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 10 கி.மீ., 5 கி.மீ., 3 கி.மீ., ஒரு கி.மீ., என நான்கு வெவ்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ