உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  எப்போது இதற்கு விடிவு? வாகன ஓட்டிகள் பெருமூச்சு

 எப்போது இதற்கு விடிவு? வாகன ஓட்டிகள் பெருமூச்சு

மேட்டுப்பாளையம்: வார விடுமுறையையொட்டி, மேட்டுப்பாளையம் பகுதியில் ஊட்டி செல்ல வாகனங்கள் அதிகரித்ததால், போக்குவரத்து நெரிசல் உண்டானது. மேட்டுப்பாளையம் நகரில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. நான்கு வழிச்சாலை அமைக்க, சமீபத்தில் 'சர்வே' எடுக்கப்பட்டது. பல்வேறு பணிகளுக்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணியும் தேசிய நெடுஞ்சாலை துறையினரால் நடத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவை பூமார்க்கெட் முதல் மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே உள்ள ரயில்வே கேட் வரையிலான, கோவை --- மேட்டுப்பாளையம் சாலை, மேட்டுப்பாளையம் -- ஊட்டி சாலைகளில் சீரமைப்பு, நான்கு வழிச்சாலை இல்லாத இடங்களில் புதிதாக சாலை அமைத்தல், 8 சிறுபாலங்கள் புதிதாக அமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நிலம் எடுப்பு என, சுமார் ரூ.235 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. சி.டி.சி., டிப்போ முதல் ஊட்டி சாலையில் உள்ள தனியார் தீம் பார்க் வரை, 10 கி.மீ., துாரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி