பட்டாம்பூச்சிகள் மண் தின்பது ஏன்?
கோவை; உண்மையில் பட்டாம்பூச்சிகள் மண்ணைத் தின்பதில்லை. அவற்றின் பிரதான உணவு பூக்களில் உள்ள மதுரம்தான். சேறு, சாணம், மண், இறந்த பொருட்களின் மீது அவைகூட்டமாக அமர்வது, அவற்றில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகளை உறிஞ்சவே. ஈரமான இடங்கள், நீர்நிலைகளின்ஓரங்களிலும் இதுபோன்று அமர்வதைக் காண முடியும். இதனை 'மட்புட்லிங்' என்கின்றனர். சோடியம், நைட்ரஜன், அமினோ அமிலங்கள் அவற்றுக்குஅதிகம் தேவைப்படுகின்றன.பொதுவாக ஆண் பட்டாம்பூச்சிகளை அதிகம், இப்படிக் காண முடியும். இனச்சேர்க்கைக்காக இவற்றை பட்டாம்பூச்சிகள் சேகரிக்கின்றன என்கின்றனர் பூச்சியியல் வல்லுநர்கள்.அடுத்தமுறை பட்டாம்பூச்சிகளை, ஓரிடத்தில் இப்படிப்பார்த்தால், அவற்றைத் தொந்தரவு செய்யாதீர்கள். சுற்றுச்சூழல் சங்கிலியில் அவற்றின் முக்கியத்துவம் குறித்து, வளரும் தலைமுறைக்கு கற்றுக் கொடுங்கள்.