| ADDED : டிச 04, 2025 08:02 AM
பெ.நா.பாளையம்: கோவை புறநகர் வடக்கு பகுதியில் சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், மடத்தூர், பாப்பநாயக்கன்பாளையம், வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யானைகளின் வரவை கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், முழுமையாக தடுக்க முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு, சின்னதடாகம் வட்டாரம் வீரபாண்டி ரோட்டில் உள்ள தோட்டத்தில் புகுந்த யானைகள் அங்கிருந்த வாழை, பாக்கு மரங்களை சேதப்படுத்தின. விவசாயிகள் கூறுகையில், 'யானை உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு வனத்துறையினரால் வழங்கப்படும் நஷ்ட ஈடு குறைவாக உள்ளது. எங்களுக்கு நஷ்ட ஈடு வேண்டாம். வனவிலங்குகள் வேளாண் நிலத்துக்குள் புகாமல் இருந்தாலே போதும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.