மேலும் செய்திகள்
மசினகுடியில் வன உயிரின புகைப்பட கண்காட்சி
06-Oct-2025
வால்பாறை; வால்பாறையில், வன உயிரின வார விழாவையொட்டி, பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் மாணவர்களுக்கான பல்வேறுபோட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு வனவர்கள் முத்துமாணிக்கம், கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், காடுகள், வனவிலங்குகள், இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என கோஷமிட்டனர். பள்ளியில் துவங்கிய பேரணி காந்திசிலை, பழைய பஸ் ஸ்டாண்ட், போஸ்ட் ஆபீஸ் வரை சென்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வனத்துறை அதிகாரிகள், வேட்டை தடுப்புக்காவலர்கள், மனித -- வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் செய்திருந்தனர்.
06-Oct-2025