மயான நிழற்கூரை சீரமைக்கப்படுமா?
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு மயானம் நிழற்கூரை மேல் பகுதி சேதமடைந்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, மயானம் நிழற்கூரையை துக்க நிகழ்வுக்கு வருபவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிழற்கூரை அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்போது மேற்கூரை சேதமடைந்து, கான்கிரீட் பூச்சு கீழே விழுந்த நிலையில் உள்ளது. இதனால், இங்கு அமர நினைப்பவர்கள் அச்சப்படுகின்றனர்.மயான நிழற்கூரை அருகே, டாஸ்மாக் மதுக்கடை இருப்பதால், இங்கு அமர்ந்து மது குடித்து காலி பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால், இங்கு சுகாதார சீர்கேடு நிலவுகிறது.இந்த நிழற்கூரையை சுற்றிலும் அதிகளவு செடிகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நிழற்கூரையை சீரமைத்து, சுற்றுப்புறத்தில் உள்ள செடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.