மேலும் செய்திகள்
பார்க்கிங் வசதி இல்லை; சுற்றுலா பயணியர் தவிப்பு
20-May-2025
வால்பாறை : வால்பாறையில் மே மாதம் இறுதியில் கோடை விழா நடத்த வேண்டும் என சுற்றுலா பயணியர் எதிர்பார்க்கின்றனர்.வால்பாறையில் சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் கோடைவிழா நடத்தப்பட்டது. இதற்காக ஆண்டு தோறும் ஊட்டியிலிருந்து மலர்கள் கொண்டுவரப்பட்டு, மலர் கண்காட்சியும் நடத்தப்படுகிறது.கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் காரணமாக வால்பாறையில் கோடை விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்தாண்டு கோடை விழா நடத்த வேண்டும் என, மக்களும், சுற்றுலா பயணியரும் வலியுறுத்தி வந்தனர்.வால்பாறை வந்த மாவட்ட கலெக்டர், இம்மாத கடைசியில் வால்பாறையில் கோடை விழா நடத்தப்படும் என, அறிவித்தார். ஆனால், வால்பாறையில் கோடை விழாவுக்கான ஆயத்தப்பணிகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.சுற்றுலா பயணியர் கூறுகையில், 'வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க மிகுந்த ஆர்வத்துடன் வெளியூர்களில் இருந்து வருகிறோம். ஆனால், வால்பாறையில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. சுற்றுலா பயணியர் மற்றும் உள்ளூர் மக்களை மகிழ்விக்கும் வகையில், ஊட்டி, கொடைக்கானலை போன்று வால்பாறையிலும் கோடை விழா நடத்த வேண்டும்,' என்றனர்.
20-May-2025