உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மனம் என்ற ஒன்று இல்லாமல் பிரபஞ்சம் என்ற ஒன்று இல்லை

 மனம் என்ற ஒன்று இல்லாமல் பிரபஞ்சம் என்ற ஒன்று இல்லை

கோவை: தமிழ்நாடு இலக்கியப் பேரவையின், 396வது இலக்கிய சந்திப்பு கூட்டம், அரசு பொறியாளர் அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு இலக்கியப் பேரவை தலைவர் பொன்முடி சுப்பையன் தலைமை வகித்தார். பேராசிரியர் குழந்தைசாமி எழுதிய 'உள்ளத்தனையது உயர்வு' என்ற நுாலை வின்ட் ப்ளஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் கருணாமூர்த்தி நீதிமணி வெளியிட்டார். நுால் குறித்து இந்திய மனோசக்தி பயிற்சி மைய தலைவர் மாசிலாமணி பேசுகையில், ''எல்லா ஆற்றலும் உனக்குள்ளேயே இருக்கிறது, உன்னால் எல்லாம் சாதிக்க முடியும் நம்பு' என்கிறார் விவேகானந்தர். மனம் என்ற ஒன்று இல்லாமல் பிரபஞ்சம் என்ற ஒன்று இல்லை என்கிறது குவாண்டம் இயற்பியல். (Quantum Physics) 'மனத்தின் சங்கல்பங்களே பிரபஞ்சமாக மாறி இருக்கிறது' என்கிறது நம் ஆன்மிக தத்துவம். விழித்திருக்கும் மனம், ஆழ்மனம் இவை இரண்டின் செயல்பாடுகளைதான் இந்நுால் விளக்குகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை