உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கொலை; பெ.நா.பாளையம் மேஸ்திரிக்கு ஆயுள்

ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கொலை; பெ.நா.பாளையம் மேஸ்திரிக்கு ஆயுள்

கோவை; கல்லால் தாக்கி பெண்ணை கொன்ற மேஸ்திரிக்கு, ஆயுள் சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை மாவட்டம், பெ.நா.பாளையம் அருகேயுள்ள தெற்கு பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ்,61; அதே பகுதியிலுள்ள ஒரு தோட்டத்தில், மேஸ்திரி வேலை செய்தார். அந்த தோட்டத்தில், அதே பகுதியில் வசிக்கும் நீலகண்டன் என்பவர் மனைவி சுப்புலட்சுமி,45, தினக்கூலிக்கு சென்று வந்தார். அப்போது, சுப்புலட்சுமியிடம் தகாத உறவு வைத்துக்கொள்ள, நாகராஜ் முயற்சித்துள்ளார். இந்நிலையில், 2014, ஆக., 12ல், சுப்புலட்சுமி வேலை செய்து கொண்டிருந்த போது, அவரது தோளில் கையை வைத்து, சில்மிஷத்தில் ஈடுபட்ட நாகராஜ், தகாத உறவுக்கு அழைத்துள்ளார்.கோபமடைந்த சுப்புலட்சுமி, நாகராஜை திட்டியதோடு, இதுபற்றி வீட்டிற்கு சென்று மற்றவர்களிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறியதால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.இதில், நாகராஜ் ஆத்திரமடைந்து, சுப்புலட்சுமியை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பினார். புகாரின் பேரில், பெ.நா.பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, நாகராஜை கைது செய்து சிறையிலடைத்தனர். அவர் மீது, கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.விசாரித்த நீதிபதி பாபுலால், குற்றம் சாட்டப்பட்ட நாகராஜூக்கு, ஆயுள்சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், வக்கீல் கணேசன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை