வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லாருடைய ஆட்சியிலும் நடந்துட்டு தான் இருக்கு...
மேலும் செய்திகள்
மேய்ச்சல் ஆடுகளை குறிவைக்கும் நாய்கள்
21-Oct-2025
கோவை: கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியிருப்பதாவது: கோவையில் விமான நிலையம் பின்புறம், கல்லூரி மாணவி மூன்று பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தகவல் அறிந்து அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். ஜெ., ஆட்சியிலும், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியிலும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், அவர்களால் வெளியில் நடமாட முடியாத சூழல் நிலவுகிறது. பெண்கள் பாதுகாப்பில் தோல்வியடைந்த இந்த மக்கள் விரோத தி.மு.க., அரசை, 2026 சட்டசபை தேர்தலில், தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி. மக்களின் ஆதரவோடு, பழனிசாமி தலைமையில், பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கக்கூடிய அரசு அமையும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாருடைய ஆட்சியிலும் நடந்துட்டு தான் இருக்கு...
21-Oct-2025