உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிலிங்கேஸ்வரர் கோவிலில் மூடுகல் அமைக்கும் பணி துவக்கம்

தேசிலிங்கேஸ்வரர் கோவிலில் மூடுகல் அமைக்கும் பணி துவக்கம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையம் தேசிலிங்கேஸ்வரர் கோவிலில் மூடுகல் அமைக்கும் பணி தொடங்கியது.பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையத்தில், தேசிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி புதிதாக கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது.கோவில் வளாகத்தில் கல்தார பணி எனும் கல்சுவர் அமைக்கும் பணி நிறைவு பெற்றதையொட்டி, மூடுகல் எனப்படும் மேல் கூரை கல்லால் அமைக்கும் பணி துவங்கியது. விழாவில், கோவில் அர்ச்சகர் தினேஷ், சிறப்பு பூஜைகள் செய்தார்.கோவில் தலைவர் பழனிசாமி தலைமையில் சண்முகசுந்தரம் மற்றும் கோவில் நிர்வாகிகள் பணிகளை துவக்கி வைத்தனர். இக்கோவிலில், 43 அடி உயர மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ