உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேலை ரெடி; நீங்க ரெடியா! முகாமில் பங்கேற்க அழைப்பு

வேலை ரெடி; நீங்க ரெடியா! முகாமில் பங்கேற்க அழைப்பு

கோவை : வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளி நடத்தப்பட்டு வருகிறது.இம்மாதத்துக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 15ம் தேதி, வெள்ளி காலை 10:00 மணி முதல், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நேரடியாக நடக்கிறது.இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள், தங்கள் சுய விபரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை.பல முன்னணி தனியார் நிறுவனங்கள், பணிக்காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படுவோருக்கு, அப்போதே பணிநியமன ஆணை வழங்கப்படும். பணி நியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்கள், மனுதாரர்கள், www.tnprivatejobs.tn.gov.inமற்றும் www.ncs.gov.inஆகிய இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.மனுதாரர்கள் அதிகளவு பங்கேற்று, முகாமை பயன்படுத்திக் கொள்ள, கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.விபரங்களுக்கு: 0422 - 2642388.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை