உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி 

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி 

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஆழியாறு ஆற்று நீரில் மூழ்கி, கோவையை சேர்ந்தவர் இறந்தார்.கோவை, போத்தனுாரை சேர்ந்தவர் தயாளன்,42. இவர், சிட்கோ பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் மின்தடை என்பதால், நான்கு நண்பர்களுடன் பொள்ளாச்சி வந்தார்.ஆனைமலை ரோட்டில் உள்ள அம்பராம்பாளையம் பகுதியில், ஆழியாறு ஆற்றில் அனைவரும் குளித்தனர். அப்போது, தயாளன் நீர்ச்சுழலில் சிக்கி, நீரில் மூழ்கி தத்தளித்தார். உடன் இருந்த நண்பர்கள் முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. நீரில் மூழ்கி இறந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ