உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

கோவை,; கோவை, சிவானந்தா காலனி, காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 52. கூலி தொழிலாளி. அதே பகுதியில் வசிக்கும் தங்கராஜ், பலரை மதமாற்றம் செய்து வருவதாக கூறி, ராதாகிருஷ்ணன் தகராறில் ஈடுபட்டு வந்தார். 2018, ஏப்., 19ல், அங்குள்ள எம்.ஜி.ஆர்., மன்றம் அருகில் தங்கராஜ் நின்றிருந்தபோது, மீண்டும் தகராறில் ஈடுபட்டு, அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த தங்கராஜை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரத்தினபுரி போலீசார் விசாரித்து, ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். இவர் மீது, கோவை முதலாவது கூடுதல் சார்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி கலைவாணி, குற்றம் சாட்டப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு இரண்டு ஆண்டு சிறை, 2,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை