உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  யானையிடமிருந்து உயிர் தப்பிய தொழிலாளி

 யானையிடமிருந்து உயிர் தப்பிய தொழிலாளி

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே கதிர் நாயக்கன் பாளையத்தில் காட்டு யானையிடமிருந்து தொழிலாளி உயிர்தப்பினார். கதிர்நாயக்கன்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு, காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதியில் நடந்து வந்தது. அங்கு கட்டட கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, தனது இருசக்கர வாகனத்தை பாதுகாப்பாக வைக்க வாகனம் அருகே வந்தபோது காட்டு யானை அவரை துரத்தியது. இதில், அங்கிருந்து வேகமாக ஓடி, யானையிடமிருந்து தொழிலாளி உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,' கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி