உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஓய்வூதியம் வழங்க கோரி தொழிலாளர்கள் போராட்டம்

 ஓய்வூதியம் வழங்க கோரி தொழிலாளர்கள் போராட்டம்

கோவை:மூன்று மாத ஓய்வுதிய தொகையை வழங்க கோரி, நல வாரியம் அலுவலகம் முன் சி.ஐ.டி.யூ., சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. ஓய்வு பெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் நல வாரியத்தின் மூலம் மாதந்தோறும் வழங்கி வரும் ஓய்வூதியம் கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை. உடனடியாக வழங்க கோரி ராமநாதபுரத்தில் உள்ள நலவாரிய அலுவலகம் முன் சி.ஐ.டி.யூ., சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடந்தது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யூ., நிர்வாகிகளிடம் தொழிலாளர் உதவி கமிஷனர் இரண்டு நாட்களுக்கு மூன்று மாத நிலுவை தொகையுடன் பென்ஷன் தொகையை வழங்குவதாக உறுதி அளித்ததால், காத்திருப்பு போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது. இதில் சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வேலுசாமி, துணைத் தலைவர்கள் ஜாகீர், ராஜகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை