தீபாவளி போனஸ் வழங்க கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம், டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி டாஸ்மாக் குடோன் முன் நடந்தது.டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி சங்க தலைவர் மாயவன் தலைமை வகித்தார். செயலாளர் திருமலை ராஜாராம், ஆர்பாட்டம் குறித்து பேசினார். சங்க நிர்வாகி விஜயகுமார் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். பி.எப்., இ.எஸ்.ஐ., முறைப்படுத்த வேண்டும். மதுபான விற்பனையை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.