உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதர் சூழ்ந்த மயானக்கூரை; தொழிலாளர்கள் அதிருப்தி

புதர் சூழ்ந்த மயானக்கூரை; தொழிலாளர்கள் அதிருப்தி

வால்பாறை; வால்பாறை, சிறுகுன்றா பகுதியில், மயானக்கூரையை புதர் சூழ்ந்துள்ளதால், தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். வால்பாறை நகராட்சி சார்பில் கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் சிறுகுன்றா எஸ்டேட் எல்.டி., டிவிஷன் காஞ்சமலை பிரிவில் மயானக்கூரை கட்டப்பட்டது. இறந்தவர்களின் உடலை புதைக்க செல்லும் உறவினர்கள் வசதிக்காக, நகராட்சி சார்பில் மயானக்கூரை கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த மயானக்கூரை தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளதோடு, சுற்றிலும் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. புதரில் சிறுத்தை பதுங்கியிருப்பதால், மயானத்தை பயன்படுத்த மக்கள் அச்சப்படுகின்றனர். தொழிலாளர்கள் கூறுகையில், 'சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள மயானத்துக்கு செல்லும் வழியில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மயானக்கூரை பராமரிப்பு இன்றி, புதர் சூழ்ந்து காணப்படுகிறது. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மயானக்கூரையை நகராட்சி சார்பில் இடித்து, புதிய மயானக்கூரை கட்டிக்கொடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ