உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக சுற்றுச்சூழல் தின விழா 8,000 மரக்கன்றுகள் வழங்கல்

உலக சுற்றுச்சூழல் தின விழா 8,000 மரக்கன்றுகள் வழங்கல்

- நிருபர் குழு-உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பொள்ளாச்சி நகர், ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வினியோகிக்க, 8,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.அதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் வாயிலாக, நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கியுள்ளன. வடக்கு ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த மரக்கன்றுகள், ஊராட்சிகளுக்கு வாகனங்கள் வாயிலாக அனுப்பப்பட்டன.அதிகாரிகள் கூறியதாவது: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பொள்ளாச்சி நகராட்சி, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகா அலுவலகங்களுக்கு தலா, 500 மரக்கன்றுகளும்; ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு தலா, 2,000 மரக்கன்றுகளும்; வடக்கு ஒன்றியத்துக்கு, 2,500 மரக்கன்றுகள் என மொத்தம், 8,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.பொது இடங்களில் நடவு செய்ய வழங்கப்பட்டுள்ளன. இவை ஊராட்சிகளுக்கு வழங்கும் பணிகள் தற்போது நடக்கின்றன.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.* பொள்ளாச்சி வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் நெடுஞ்சாலை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி ஆனைமலையில் நடந்தது. இதில், சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். தொடர்ந்து, ஆனைமலை - பூலாங்கிணறு இடையிலான சாலையோரம் 50 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.பொள்ளாச்சி நீதித்துறை மாஜிஸ்திரேட் II -பிரகாசம், மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுஜாதா, பொள்ளாச்சி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநாத், பொள்ளாச்சி நீதித்துறை நீதிபதி மாஜிஸ்திரேட் 1 -சரவணக்குமார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆனைமலை பேரூராட்சி செயல் அலுவலர், ஈரம் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* பொள்ளாச்சி அருகே ஆர்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் பாரிஸ்பேகம் தலைமை வகித்தார்.தொடர்ந்து, சுற்றுச்சூழல், சுற்றுப்புற மாசு அடைவதால் ஏற்படும் பாதிப்பு, பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் என பல்வேறு தலைப்புகளில் விளக்கிப் பேசினார்.தவிர, கட்டுரை, கவிதை, ஓவியம், ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களில் வென்றவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

உடுமலை

உடுமலை ஆர்.ஜி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் உறுதிமொழி எடுத்தனர். சுற்றுச்சூழல் தினம் தொடர்பான கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடந்தன.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பயன்படாத மின்சாதன பொருட்கள், அதன் கழிவுகளை பயன்படுத்தி அலங்காரப்பொருட்கள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விழாவில் பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் சகுந்தலாமணி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விக்டஸ் குழுமம் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன் துவக்கி வைத்தார். அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் முன்னிலை வகித்தார்.பேரணி பள்ளியில் துவங்கி, குமரலிங்கம் பஸ் ஸ்டாப் வரை நடந்தது. மாணவர்களுக்கு சுற்றுசூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி பசுமைப்படை ஆசிரியர் மதன் விழாவை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !