மேலும் செய்திகள்
ஓமந்துாராரில் 10 ஆண்டில் 25,500 இதய சிகிச்சை
28-Sep-2024
கோவை: எமரால்டு நிறுவன கிரிஷா அறக்கட்டளையின், சி.எஸ்.ஆர்., திட்டத்தில் செயல்படும் எமரால்டு மருத்துவ நல மையத்தின் சார்பில், உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் கொடியசைத்து துவக்கிவைத்தார். பின், எமரால்டு மருத்துவ நல மையத்தில் இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது; பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். அனைவரும் இதய ஆரோக்கியத்தை மையமாக கொண்டு, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். எமரால்டு நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சக்தி சீனிவாசன், இயக்குனர் நிஸ்டா சீனிவாசன், மருத்துவ நல மையத்தின் மருத்துவர் ராதிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
28-Sep-2024