மேலும் செய்திகள்
சலபாசனத்தில் கும்மிடி மாணவர்கள் சாதனை
19-May-2025
கோவை; தொல்காப்பியரின் உருவப்படத்தில், தொல்காப்பிய பாடல்களை எழுதும் உலக சாதனை நிகழ்வை சியாம் ஆர்ட் அண்ட் கிராப்ட் பெங்களூர் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடத்தியது.இதில், கவுண்டம்பாளையம், பிருந்தாவன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி லித்திகா ஸ்ரீ, கலந்துகொண்டார். இவர், தொடர்ந்து 39 மணி நேரம் தொல்காப்பியப் பாடல்களை எழுதி உலக சாதனை புரிந்து, தொல்காப்பிய வெற்றி மாலை விருதை வென்றார்.தொல்காப்பிய துாதுவர் என்ற பட்டம் மற்றும் உலக சாதனையாளர் சான்றும் பெற்றார். கோவை கலெக்டர் பவன்குமார், மாணவிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.உலக சாதனை படைத்து, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி லித்திகா ஸ்ரீவை, பிருந்தாவன் வித்யாலயா பள்ளி முதல்வர் மேரி பிரீத்தா மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
19-May-2025