உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக சுற்றுலா தினம்; மரம் நடும் விழா

உலக சுற்றுலா தினம்; மரம் நடும் விழா

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் அரசு பள்ளியில், அரச மர கன்றுகள் நடும் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக நாயக்கன்பாளையம் பஞ்சாயத்து செயலாளர் கார்த்தி பங்கேற்றார். ஈஷா இயக்கம் வாயிலாக கடந்த, 25 ஆண்டுகளாக, விவசாய நிலங்களில் 12.1 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. விவசாயிகள் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகள், ஈஷா நாற்று பண்ணைகள் வாயிலாக, குறைந்த விலையில், அதாவது மூன்று ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன. தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகாகனி, ரோஸ்வுட் வருமானம் தரக்கூடிய டிம்பர் மரங்கள் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு வருகின்றனர். இவற்றை ஏக்கருக்கு, 300 மரங்கள் வரை நடலாம் அல்லது வேலி ஓரங்களில் மட்டும், 100 மரங்கள் வரை நடலாம். கூடுதல் தகவல்களுக்கும், மரக்கன்றுகளை பெறவும், 80009 80009 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ