உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக தண்ணீர் தினம்; கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினம்; கிராம சபை கூட்டம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள, ஒன்பது ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.உலக தண்ணீர் தினம், கடந்த 22ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம் தமிழக முழுவதும் உலக தண்ணீர் தினகிராம சபை கூட்டம்நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் வீரபாண்டி, சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, சோமையம்பாளையம், அசோகபுரம், குருடம்பாளையம், நாயக்கன்பாளையம், பிளிச்சி ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், மழைநீர் சேகரிப்பு குளம் அமைத்து நிலத்தடி நீரை செரிவூட்டுவது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.ஒவ்வொரு வீட்டிலும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.மேலும், கனவு இல்ல திட்டத்தில், 2025--26ம் ஆண்டில் வீடு கட்டும் பயனாளிகள் பட்டியல், முதல்வரின் வீடு மறு கட்டமைப்பு திட்ட பயனாளிகள் பட்டியல் கிராம சபாவில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை