உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தை அமாவாசைக்கு கோவில்களில் பூஜை

தை அமாவாசைக்கு கோவில்களில் பூஜை

வால்பாறை; வால்பாறையில் உள்ள கோவில்களில், தை அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, காசிவிஸ்வநாதருக்கு தை அமாவாசை தினமான நேற்று காலை, 5:00 மணிக்கு அபிேஷக, ஆராதனை நடைபெற்றது. காலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சிவபெருமானை வழிபட்டனர்.நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவிலில் நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு பூஜை நெய்வேத்தியம், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அமாவாசை பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ